சிறுமியர் பலாத்கார வழக்கு சி.பி.ஐ., பதிலளிக்க உத்தரவு

Added : ஜன 14, 2020
Share
Advertisement
புதுடில்லி : பீஹாரின் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில், சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது பதிலளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, முசாபர்பூரில் உள்ள சிறுமியர் பாதுகாப்பு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பீஹாரின் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில், சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது பதிலளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்கு, முசாபர்பூரில் உள்ள சிறுமியர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த, சில சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, 2018ல் தெரிய வந்தது.இது தொடர்பாக விசாரித்த, சி.பி.ஐ., அந்த பாதுகாப்பு இல்லத்தை நடத்தி வரும், பிரஜேஷ் தாக்குர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தது. விசாரணை முடிந்த நிலையில், கடந்தாண்டு, நவ., 20ல் இருந்து, இரண்டு முறை தீர்ப்பு தேதி மாற்றி அமைக்கப்பட்டது.ஒரு முறை நீதிபதி விடுமுறையில் சென்றதால், தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் போராட்டத்தால், இரண்டாவது முறையும், தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இறுதி விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. அப்போது, வழக்கின் முக்கிய குற்ற வாளியான பிரஜேஷ் தாக்குர், புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தாவது:இந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின்போது, சி.பி.ஐ., சமீபத்தில் புதிய தகவலை தெரிவித்தது. 'இந்த பாதுகாப்பு இல்லத்தில், உயிரிழந்ததாகக் கூறப்படும் சில சிறுமியர் உயிருடன் உள்ளனர்' என, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

இதில் இருந்து, அரசு தரப்பு சாட்சியம் தரமானதாக இல்லை என்பது தெரிய வருகிறது. அவர்களுடைய சாட்சி களை அடிப்படையாக வைத்து தீர்ப்பு அளிக்கக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதையடுத்து, இது குறித்து இரண்டு நாட்களுக்குள் பதிலளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X