ஜே.என்.யு., வன்முறை குறித்த பதிவுகள்

Added : ஜன 14, 2020
Advertisement

புதுடில்லி : ஜே.என்.யு., எனப்படும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த வன்முறையின் போது, சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும், அந்த தகவல்களை போலீசாரிடம் கொடுக்கும்படியும், 'கூகுள், வாட்ஸ் ஆப்' நிறுவனங்களுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொடூர தாக்குதல்


டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள், விடுதி கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.கடந்த, 5ம் தேதி, பல்கலைக்குள் புகுந்த, முகமூடி அணிந்த ஒரு கும்பல், மாணவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியது.இதில், ஏராளமான மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த விவகாரம், நாடு முழுதும்சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கலவரம் நடந்தபோது சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி, வாட்ஸ் ஆப், கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி, பல்கலையின் மூன்று பேராசிரியர்கள், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி பிரிஜேஸ் சேதி அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூகுள் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது:யாருடைய மொபைல் போனிலிருந்து பகிரப்பட்ட தகவல்கள் வேண்டும் என்ற விபரத்தையும், அவர்களது இ-மெயில் முகவரியையும் தெரிவித்தால், அது குறித்து ஆய்வு நடத்தி, அந்த தகவல்களை தருவதற்கு முயற்சிப்போம்.

இவ்வாறு, அவர் கூறினார். சேமிக்க முடியாதுஆனால், வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சம்பந்தப்பட்ட வாட்ஸ் ஆப் குரூப்பிலிருந்து, ஒருவருக்கு தகவல் அனுப்பப்பட்டு விட்டால், அதை, 'சர்வரில்' சேமிக்க முடியாது. அதற்கான தொழில்நுட்ப வசதி எங்களிடம் இல்லை' என்றார். இதையடுத்து, வன்முறையின் போது பகிரப்பட்ட தகவல்களை, டில்லி போலீசாரிடம் அளிக்கும்படி, கூகுள், வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், பல்கலை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருந்து போலீசாரிடம் கொடுக்கும்படியும், பல்கலை நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மூன்று பேராசிரியர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும் நீதிபதி அறிவித்தார். விசாரணைபல்கலையில் நடந்த வன்முறை தொடர்பாக, டில்லி போலீசார், பல்கலையின் முன்னாள் மாணவர்களான சுசெதாடலுகடர், பிரியா ரஞ்சன் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X