வில்சனைக் கொன்ற பயங்கரவாதிகள் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்

Added : ஜன 14, 2020
Advertisement
 வில்சனைக் கொன்ற பயங்கரவாதிகள் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்

பெங்களூரு : கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், போலீஸ் எஸ்.ஐ., வில்சன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டு பயங்கரவாதிகள், கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில், ஹிந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில், பெங்களூரில் பதுங்கியிருந்த ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று பயங்கரவாதிகளை, தமிழக கியூ பிரிவு போலீசார், கடந்த வாரம் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட்டையில் பதுங்கியிருந்த, அல் - உம்மா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மெகபூப் பாஷா, அவருக்கு இருப்பிடமளித்த, மதகுரு சதாகத் உல்லாகான் ஆகிய இருவரை, ஜன., 11ம் தேதி, கைது செய்தனர்.

இதற்கிடையில், மெகபூப் பாஷாவின் பயங்கரவாத செயல்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்த ஜாஹிர், அவர் நண்பர் சலிம் இருவரும், கர்நாடக மாநிலம், கோலாரில் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் படி, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில், வில்சனை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக்குடன் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே, அவர்களை பிடிக்க போலீசார், 13 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், உடுப்பி ரயில் நிலையத்தில், அவர்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வருவதை அறிந்த இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். கர்நாடகாவின், சி.சி.பி., எனப்படும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன், தமிழக போலீசார், அவர்களை நேற்று அதிகாலை கைது செய்தனர்; பெங்களூரு அழைத்து வந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாதிகள் இருவர் மீது, பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. எஸ்.ஐ., கொலைக்கு பின், இருவரும் கேரளா சென்று, வயநாடு, மடிகேரி வழியாக உடுப்பி வந்துள்ளனர். பின், மங்களூரு வழியாக நேபாளம் செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X