வரும், 20ல் பிரதமர் மோடி கலந்துரையாடல்| Dinamalar

வரும், 20ல் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Added : ஜன 14, 2020
Share
புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு, ஜன., ௨௦ம் தேதி, மாணவர்களுடன், பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுதும் உள்ள மாணவர்களுடன், கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை, கடந்த ஆண்டு

புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்த ஆண்டு, ஜன., ௨௦ம் தேதி, மாணவர்களுடன், பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுதும் உள்ள மாணவர்களுடன், கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை, கடந்த ஆண்டு வானொலி மற்றும் 'டிவி' சேனல்களில், 8.5 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பார்த்துள்ளனர். பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கடந்த ஆண்டு, 1.4 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

இந்த ஆண்டு, 2.6 லட்சம் மாணவர்கள், பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பில், பிரதமர் மோடி, மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும்போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், வரும், ௨௦ம் தேதி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாட உள்ளார். இதில், மாணவர்கள் சமர்ப்பித்துள்ள கட்டுரைகளின் அடிப்படையில், பிரதமரிடம் கேள்விகளை கேட்கலாம். இதற்காக, 1,050 மாணவர்களின் பெயர்களை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X