காற்றாடி திருவிழாவில் களைகட்டிய அரசியல்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
ஆமதாபாத் : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு, ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும், ஆயிரக்கணக்கான காற்றாடிகள், குஜராத் மாநிலத்தில் பறக்க விடப்பட்டன. குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மகர சங்கராந்தியை முன்னிட்டு, மக்கள் காற்றாடி பறக்கவிடுவது வழக்கம். தற்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும்

ஆமதாபாத் : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு, ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும், ஆயிரக்கணக்கான காற்றாடிகள், குஜராத் மாநிலத்தில் பறக்க விடப்பட்டன.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மகர சங்கராந்தியை முன்னிட்டு, மக்கள் காற்றாடி பறக்கவிடுவது வழக்கம். தற்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அது காற்றாடி விடுவதிலும் பிரதிபலித்துள்ளது.பா.ஜ., உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், காங்., உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்தவர்கள், எதிர்ப்பு வாசகங்கள் அச்சிடப்பட்ட காற்றாடிகளை, ஆயிரக்கணக்கில் பறக்கவிட்டு வருகின்றனர்.

பா.ஜ., சார்பில், 50 ஆயிரம் காற்றாடிகள், இலவசமாக வினியோகிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர். ஆமதாபாதில் இருந்து, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் காற்றாடியை, மாநில முதல்வர் விஜய் ரூபானி பறக்கவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X