ஜும்மா மசூதி முன் போராடினால் என்ன பிரச்னை? டில்லி போலீசுக்கு நீதிபதி கண்டனம்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (22)
Advertisement
JamaMasjid,Delhi_police,court,Judge,ஜும்மா_மசூதி,நீதிமன்றம்,கண்டனம்

புதுடில்லி : 'ஜும்மா மசூதி, இந்தியாவுக்குள் தான் இருக்கிறது. அது, பாகிஸ்தானில் இருப்பதை போல் ஏன் நடந்து கொள்கிறீர்கள். அங்கு போராடினால், உங்களுக்கு என்ன பிரச்னை? போராட்டம் நடத்துவது, ஜனநாயக நாட்டில் தவறில்லை' என, டில்லி போலீசாருக்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, நாடு முழுதும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டில்லி ஜும்மா மசூதி முன், போராட்டம் நடத்திய போது, 'பீம் ஆர்மி' என்ற அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், கடந்த மாதம், 21ல் கைது செய்யப்பட்டார்.


உரிமை உள்ளது


அவரது ஜாமின் மனு, டில்லி நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, கூடுதல் செஷன்ஸ் நீதிபதி காமினி லாவு கூறியதாவது:போராட்டம் நடத்துவது, ஜனநாயக உரிமை. மக்கள் அமைதியாக போராடுவதில், உங்களுக்கு என்ன பிரச்னை. பார்லிமென்ட் முன் போராடிய பலர், தலைவர்களாகவும், அமைச்சர்களாகவும் பிற்காலத்தில் வளர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன். சந்திரசேகர் ஆசாத், ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி; போராட, அவருக்கு உரிமை உள்ளது.ஜும்மா மசூதி, டில்லியில் தான் உள்ளது. அது, பாகிஸ்தானில் இருப்பதை போல, ஏன் நடந்து கொள்கிறீர்கள்.

ஜும்மா மசூதி முன் பேராட்டம் நடத்தக்கூடாது என, சட்டம் இருந்தால், அதை காட்டுங்கள். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மக்கள் அறிய வேண்டிய தகவல்கள், முறைப்படி பார்லிமென்டில் சொல்லப்படவில்லை. எனவே தான், மக்கள் தெருவில் இறங்கி போராட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


அவகாசம் வேண்டும்


இதையடுத்து, 'ஜும்மா மசூதி முன் நடந்த பேராட்டத்தின் போது, சந்திரசேகர் ஆசாத் வன்முறையை துாண்டும் விதமாக செயல்பட்டார்.'அதற்கான, 'வீடியோ' ஆதாரங்கள் உள்ளன. அதை சேகரிக்க அவகாசம் வேண்டும்' என, அரசு தரப்பு வாதிட்டது. இதையடுத்து, 'எல்லா வழக்கிலும், ஆதாரங்கள் அனைத்தையும் உடனுக்குடன் சமர்ப்பிக்கும் அரசு தரப்பு, போராட்டம் தொடர்பான வழக்கில், ஆதாரங்கள் திரட்ட, ஏன் இவ்வளவு திணறுகிறது' என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
15-ஜன-202020:49:07 IST Report Abuse
GMM போராட்டம் நடத்துவது ஜனநாயக நாட்டில் தவறு இல்லை. முன்பு மக்கள் நடந்து செல்வர். இன்று சரியான நேரத்தில் வேலையில் இருக்க வேண்டும். போராட்டம் அடுத்தவருக்கு இடையூறு இருக்கும் . So, போராட்டம் மீது போலீஸ் தான் கட்டுப்பாடு விதிக்கும். போலீஸ் வக்கீல்களின் தவறான கேள்விகளுக்கு பயந்து ஏதாவது ஒரு பதிலை கொடுக்க கூடாது. சட்டம் ஒழுங்கு நடவடிக்கை உங்கள் பொறுப்பு. குடியுரிமைச்சட்டம் இந்திய குடிமக்கள் , கட்சிகள், அமைப்புகள் பற்றியது அல்ல. இந்திய குடிமகனுக்கு பாதிப்பு இல்லை. அண்டை நாட்டு ஊடுருவல்காரருக்கு பாதிப்பு? குடியுரிமை கேட்டு அரசு மறுக்கும் நபர்கள் பற்றிய விவரம் நீதிமன்றத்தில் போராட்டக்காரர்கள் கொடுக்க முடியுமா? அண்டை நாட்டு பிரஜை எனில், அந்த நாட்டு NOC வேண்டாமா? காரணம் இன்றி போராட்டதை அனுமதிக்க கூடாது. சரியா?
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
15-ஜன-202020:37:25 IST Report Abuse
மனிதன் நியாயமாக கேள்வி கேட்டதால்,இந்த நீதிபதி இப்போது, தேசவிரோதியாக மாறியிருப்பாரே....
Rate this:
Share this comment
Cancel
Amreen - Connecticut,யூ.எஸ்.ஏ
15-ஜன-202018:43:53 IST Report Abuse
Amreen பாலைவன மார்க்கம் வன்முறை, ஆள் கடத்தல், போராட்டம், மற்ற மதத்தவர்களை கொள்வது, இளம் பெண்களை கடத்துவது ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள். அப்பாவிகளின் ரத்தத்தினால் வளரும் மார்க்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X