சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் சசி தரூர்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (6)
Advertisement
ShashiTharoor,apology,ArvindKejriwal,CongressMP,சசிதரூர்,சர்ச்சை, பேச்சு,வருத்தம்,கெஜ்ரிவால்

புதுடில்லி : டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை விமர்சித்தபோது, காங்., - எம்.பி., சசி தரூர் பேசிய பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அதற்கு மன்னிப்பு கோரிய சசி தரூர், கருத்தை திரும்பப் பெறுவதாக கூறினார்.

டில்லியில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, காங்., - எம்.பி., சசி தரூர் நேற்று முன்தினம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :டில்லி முதல்வர் கெஜ்ரிவால், இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்ட கெஜ்ரிவால், வேறு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அந்த சட்டத்துக்கு எதிராக, டில்லியில் பல வன்முறைகள் அரங்கேறின.

எனினும், மாநில முதல்வராக இருக்கும் கெஜ்ரிவால், மனித இரக்கத்தைக் கூட வெளிப்படுத்தாமல் இருக்கிறார். கடமையை செய்யாமல், அதிகாரம் மட்டும் வேண்டும் என, கெஜ்ரிவால் ஆசைப்படுகிறார். அது, திருநங்கையரின் பண்பு என்பதை, நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.

சசி தரூரின் அந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியினர், நெட்டிசன்கள் என பல தரப்பினரும், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். திருநங்கையர் மீது தவறான அபிப்பிராயத்தை கொண்டுள்ள சசி தரூர், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து, தன் பேச்சுக்கு மன்னிப்பு கோரிய எம்.பி., சசி தரூர், கருத்துகளை திரும்பப்பெறுவதாக தெரிவித்தார். எனினும், திருநங்கையை விமர்சனம் செய்து பேசியது குறித்து, நேரடியாக சசி தரூர் வருத்தம் தெரிவிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன்... விவசாயி மகன் - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜன-202016:11:09 IST Report Abuse
இந்தியன்... விவசாயி மகன் விடுப்பா விடுப்பா தேர்தல்னா காங்கிரஸ்காரன் மக்கள் காலில் விழுவதும் ஜெயிச்சிட்டா மக்களை ஏறி மிதிப்பதும் சகஜம் தான்பா
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
15-ஜன-202012:05:16 IST Report Abuse
elakkumanan சாரே, எதிர்கால (இருந்தால் )காண் கட்சிக்கு ஒரு அப்ட் தலைவர் நீதான். ஒருபாடு மாப்பு பரஞ்சு சாரே...கொள்ளாம். சாரே கொள்ளாம்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
15-ஜன-202009:02:14 IST Report Abuse
blocked user இவனுக்கு மரை கழன்று விட்டது என்று நினைக்கத் தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X