அனைத்து கட்சி கூட்டம் வேண்டும்: பிரதமரிடம் காங்., வலியுறுத்தல்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (4)
Advertisement
RandeepSurjewala,Congress,PM,Modi,IndianNationalCongress,INR காங்கிரஸ், பிரதமர், மோடி

புதுடில்லி: 'அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க, பிரதமர் மோடி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், நாடு முழுதும், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், விலை உயர்வை சந்தித்து வருகின்றன.


தொடர்ந்து அதிகரிப்பு:

சாமானிய மக்களை பாதிக்கும், இந்த விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என, மத்திய பா.ஜ., அரசை, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த பிரச்னையை முன்வைத்து, காங்., செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: வெறுப்பு மற்றும் பிளவு படுத்தும் அரசியலில் ஈடுபடுவதை முதலில் நிறுத்தி விட்டு, நாட்டின் வளர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும். நாட்டில், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், ஏழை எளிய மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த நிலைமையை சீர் செய்ய வேண்டும்.


உரிய நடவடிக்கை:

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பிரதமர் மோடி முன்வந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்த கூட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, எடுக்க வேண்டிய உரிய நடவடிக்கைகள் அடங்கிய திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது, அடுத்த, 30லிருந்து,- 60 நாட்களுக்குள் நடக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜன-202016:52:40 IST Report Abuse
Endrum Indian அனைத்து கட்சி கூட்டம் என்றால் இந்திய கட்சி என்று அர்த்தம் அப்படித்தானே ஆகவே முஸ்லீம் நேரு இத்தாலிய சோனியா காங்கிரஸ் கட்சிக்கு அதில் பங்கு கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
15-ஜன-202009:00:21 IST Report Abuse
blocked user அப்படியே ஒரு பாராளுமன்ற குழு அமைத்து வெட்டி வேலை செய்யலாம்... போங்கடா நீங்களும் உங்கள் எல்லாக்கட்சி கூட்டமும்..
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜன-202008:30:08 IST Report Abuse
ஆரூர் ரங் உன் ஆட்சியில் பணவீக்கம் பத்துக்கும் மேல் போனபோது என்ன சொன்னாய்? இப்போ ஐந்தாறு வருடமாக பணவீக்கம் நான்குக்கு இறங்கி இருந்தபோது ஏன் பாராட்டவில்லை? நல்லது நடக்கும்போது பாராட்டாதவர்கள் மற்ற நேரங்களில் வாய்திறக்கும் உரிமையற்றவர்கள் .விலையேறியிருப்பது பாவப்பட்ட விவசாயிகளின் உற்பத்திப்பொருட்கள்தானே ஒழிய கார்பொரேட் உற்பத்திப் பொருட்களல்ல விளைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காமல் உங்கள் ஆட்சியிருந்த மாநிலங்களிலேயே லட்சக்கணக்கான விவசாயிகள் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டது உங்க ஆட்சியில்தான் .அப்போது உணவுப்பொருள் விலையிறங்கியதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X