செய்தி சில வரிகளில்...

Added : ஜன 14, 2020
Advertisement

ஓமன் சுல்தான் மறைவுக்கு நக்வி இரங்கல்மஸ்கட்: ஓமன் வந்துள்ள மத்திய அமைச்சர், முக்தார் அப்பாஸ் நக்வி, நேற்று, புதிய சுல்தான் ஹைதாம் பின் தாரிக் அல் சையதை சந்தித்து, சுல்தான் குவாபூஸ் மறைவுக்கு, இரங்கல் தெரிவித்தார். அந்த சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி கொடுத்து அனுப்பிய தனிப்பட்ட கடிதத்தை, சுல்தான் ஹைதாமிடம், நக்வி வழங்கினார்.

புதைகுழியில் கவிழ்ந்த பேருந்துபெய்ஜிங்: சீனாவின் ஜினிங் நகரின் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, எதிர்பாராதவிதமாக புதைகுழியில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த ஆறு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காணாமல்போன நான்கு பேரை, அந்த குழியில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், 16 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

29 சடலங்கள் கண்டெடுப்பு குவாடலஜரா: மெக்சிக்கோவின் மேற்கில் அமைந்துள்ள ஜலிஸ்கோ மாகாணத்தில், ஒரு பகுதியில் உள்ள நிலத்தில் இருந்து, நேற்று, 29 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில், கடந்த நவம்பர் மாதம் முதல், மொத்தம், 80 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தீவிரவாதிக்கு உதவியதால் சிறைசிங்கப்பூர்: துருக்கி நாட்டில், ஐ.எஸ்., தீவிரவாதி முகமது அல் சையது அல்மிதான் என்பவருக்கு, நிதியுதவி செய்து உதவிய, சிங்கப்பூரைச் சேர்ந்த இம்ரான் கசீமுக்கு, 33 மாத கால சிறை தண்டனை வழங்கி மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்தார்.புற்றுநோய் வலியை உணர அமைப்புவாஷிங்டன்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் வலி குறித்து, அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, அமெரிக்காவின் வாஷிங்டனில், ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. “ஹோல்டிங் ஹாண்ட்ஸ் பவுண்டேஷன்” என்ற அந்த அமைப்பை உருவாக்கியவர்களின் மகள், புற்றுநோயால், தன் 33வது வயதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நான் குற்றவாளி அல்லலாகூர்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஹபீஸ் சயீது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லாகூரில் உள்ள, பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட ஹபீஸ், தான் எந்த குற்றங்களையும் இழைக்கவில்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் கூறினார். அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.பிரக்யா தாக்கூருக்கு மர்ம கடிதம்போபால்: மத்திய பிரதேச மாநிலம், போபால்எம்.பி., பிரக்யா தாக்கூருக்கு, வந்த மர்ம கடிதத்தால், பரபரப்பு ஏற்பட்டது. உருதி மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்துடன், சில ஆவணங்களும், ஒரு வித பவுடரும், அனுப்பப்பட்டிருந்தன. இந்த மர்ம கடிதம் தொடர்பாக, ம.பி., போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.சாலை பாதுகாப்புக் குழுவுக்கு புதிய தலைவர்புதுடில்லி: சாலை பாதுகாப்புக் குழுவின் புதிய தலைவராக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, ஏ.எம்.சாப்ரேவை, நியமித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. சாலை பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சாலை பாதுகாப்புக் குழுவை, முன்னர் அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய விருந்தினர் மாளிகை பணியாளருக்கு சிறைலண்டன்: இங்கிலாந்தில் உள்ள இந்திய விருந்தினர் மாளிகையில், இரண்டு பெண் விருந்தினர்களை, அங்கு பணிபுரிந்த பணியாளர் ஜான் குந்திபில்லி சவுரியப்பன் என்பவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த பணியாளருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X