தமிழக லோக்ஆயுக்தா சட்டம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Added : ஜன 14, 2020
Advertisement

புதுடில்லி : தமிழக லோக்ஆயுக்தா சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள சட்டங்கள் குறித்த விபரங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக, லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம், 2013ல் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் லோக்ஆயுக்தாவை நிறைவேற்றும் வகையில், கடந்த, 2018ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக லோக்ஆயுக்தா சட்டமானது, அந்த அமைப்பை ஒரு ஆலோசனை வழங்கும் அமைப்பாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், முக்கிய சட்டத்தில், இந்த அமைப்பு, செயல்படுத்தும் அமைப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.முக்கிய சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளதால், தமிழக அரசின் சட்டம், சட்டவிரோதமானது என, அறிவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், ரவீந்தர் பட் அமர்வு கூறியுள்ளதாவது:லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்கும் வகையில் மற்ற மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்தச் சட்டம் குறித்து, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளின் விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது. அதையடுத்து வழக்கின் விசாரணை, ஏப்., முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X