ஆஸ்திரேலியாவில் தண்ணீர் பஞ்சம் ஒட்டகங்கள் சுட்டுக்கொலை

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (2)
Advertisement

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில், பாலைவன பகுதிகளில், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து, அவர்களின் வாழ்வாதாரங்களை சேதப்படுத்துவதாக கூறி, ஒட்டகங்கள் சுட்டு கொல்லப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டின் வனப்பகுதிகளில், தண்ணீர் இல்லாமல் போனதால், அடிக்கடி காட்டுத்தீ உருவாகி வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவின், வடமேற்கு பகுதியில், ௨,௩௦௦க்கும் மேற்பட்ட, பழங்குடியினர் வசிக்கும் பகுதி உள்ளது.இங்குள்ள பாலைவன பகுதியில், அதிக எண்ணிக்கையில் ஒட்டகங்கள் உள்ளன. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், சுமார் ௧௦ லட்சத்திற்கும் அதிகமான ஒட்டகங்கள் அந்நாட்டில் உள்ளன.

பாலைவன பகுதிகளில் இருந்து, தண்ணீருக்காக வன பகுதிகளுக்கு ஒட்டகங்கள் வருகின்றன. வறட்சியால் அங்கும் தண்ணீர் கிடைக்காத நிலையில், ஒட்டகங்கள், பழங்குடியினர் வாழும் பகுதியில் நுழைகின்றன. இதுபோல் வரும் ஒட்டகங்களால், மக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதுடன், அவர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்படுகிறது.இதனால், வன ஒட்டகங்களை கட்டுப்படுத்த வேண்டும், என்று பழங்குடியின மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, வாழ்வாதாரங்களுக்காக மக்களுடன் போட்டியிடும் நிலை, ஒட்டகங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

இப்பிரச்னையில் வேறு வழியின்றி, பழங்குடியின மக்களை அச்சுறுத்தும் ஒட்டகங்களை, சுட்டுக்கொல்ல முடிவு செய்யப்பட்டது.இதன்படி, தற்போது ௫,௦௦௦க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் கொல்லப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கைக்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
15-ஜன-202014:23:22 IST Report Abuse
Indhuindian Where has PETA vanished? Probably busy in gathering Camel meat?
Rate this:
Share this comment
Cancel
K.G.Gopinath Kannan - Chennai,இந்தியா
15-ஜன-202009:33:14 IST Report Abuse
K.G.Gopinath Kannan அடப்பாவிகளா. இங்கே ஜல்லிக்கட்டுக்கு எதிரா கலாட்டா செய்த அயோக்கிய பீட்டா அமைப்பு எங்கே போனது. நம்மெல்லாம் ஏமாளிங்க... இங்கே ஆடுவாங்க... ஆஸ்திரேலியா நாட்டுல இவங்க ஆட்டம் எடுபடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X