ராஜீவ் கொலை வழக்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

Added : ஜன 14, 2020
Advertisement

புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், குண்டு தயாரிப்பு பற்றிய விசாரணை விபரங்கள் தொடர்பாக, குற்றப் புலனாய்வு துறை தாக்கல் செய்த அறிக்கைக்கு, உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட குண்டு தயாரிப்பு குறித்து, குற்றப் புலனாய்வு துறையின் ஒழுங்கு கண்காணிப்பு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.'இவ்விசாரணையை முடிக்கும் வரை, தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பேரறிவாளன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில், குண்டு தயாரிப்பு குறித்த விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்து, குற்றப் புலனாய்வு துறை போலீசார், உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.இது, உச்சநீதிமன்ற நீதிபதி, எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம்:இதற்கு முன் குற்றப் புலனாய்வு துறை தாக்கல் செய்த அறிக்கைக்கும், தற்போதைய அறிக்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாங்காக் சென்றது உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் ஏற்கெனவே தெரிவித்த அறிக்கையில் உள்ளபடியே, தற்போதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த விசாரணையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

இது தொடர்பாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி பதில் அளிக்கவும், குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் புதிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X