'நிர்பயா' வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி! சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1+ 43)
Advertisement
நிர்பயா_வழக்கு, குற்றவாளி, தூக்கு, உறுதி, சீராய்வு_மனு

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, குற்றவாளிகள் நான்கு பேருக்கும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, வரும், 22ம் தேதி காலையில், திகார் சிறையில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012 டிசம்பரில், ஆறு பேர் அடங்கிய கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம், நாடு முழுதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டில்லியில் தொடர் போராட்டங்கள் நடந்தன. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆறு பேரை கைது செய்தனர்.


விடுவிப்பு:

இவர்களில் ஒருவன், 'மைனர்' என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டான். மற்றவர்கள் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஐந்து பேருக்கும், டில்லி உயர் நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கிடையே, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங், தற்கொலை செய்தார். வினய் சர்மா, 26, முகேஷ் குமார், 32, அக் ஷய் குமார், 31, பவன் குப்தா, 25, ஆகியோருக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, 2017ல், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதை எதிர்த்து நான்கு பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனு, 2018ல், தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நான்கு பேருக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான, 'வாரன்ட்' சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது. வரும், 22ம் தேதி அதிகாலை, 7:00 மணிக்கு, நான்கு பேருக்கும், திகார் சிறையில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது. துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு, திகார் சிறையில் ஊழியர் இல்லாததால், உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள சிறையிலிருந்து, ஊழியரை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஒத்திகை:

சமீபத்தில், திகார் சிறையில் பொம்மைகளை வைத்து, துாக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து, சிறை அதிகாரிகள் ஒத்திகை நடத்தினர். இதற்கிடையே, குற்றவாளிகளில் இரண்டு பேரான, வினய் சர்மாவும், முகேஷ் குமாரும், துாக்கு தண்டனையை ரத்து செய்யும் கடைசி முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஷ்ரா, ஆர்.எப்.நாரிமன், ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மறு சீராய்வு மனு தொடர்பான விசாரணை, நீதிபதிகள் அறையிலேயே நடந்தது. அப்போது, இரண்டு பேரும் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என கூறி, நீதிபதிகள் ஒருமனதாக நிராகரித்தனர். மேலும், துாக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிபதிகள் நிராகரித்தனர். இதையடுத்து, குற்றவாளிகள் நான்கு பேருக்கும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, வரும், 22ம் தேதி அதிகாலை, திகார் சிறையில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகி உள்ளது.

''குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது, வரவேற்கத்தக்கது; இது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக, நீதி கிடைக்க வேண்டும் என போராடி வந்தேன். தற்போது நீதி கிடைத்துள்ளது. ஆனாலும், துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும், 22ம் தேதி தான், எனக்கு உண்மையான மகிழ்ச்சியை தரும் நாளாக இருக்கும்''
-ஆஷா தேவி, நிர்பயாவின் தாய்

Advertisement




வாசகர் கருத்து (1+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
15-ஜன-202006:21:07 IST Report Abuse
blocked user ஒரு முறைக்கு மேல் ஜனாதிபதியிடம் செல்லுவது நீதித்துறை மிக மிக கேவலமான நிலையில் இருப்பதை காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X