இந்திய வம்சாவளி பெண்

Added : ஜன 14, 2020
Advertisement

லண்டன் : பிரிட்டனில், தொழிலாளர் கட்சி தலைவர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பெண் எம்.பி., லிசா நான்டி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர், இந்திய தந்தைக்கும், பிரிட்டன் தாய்க்கும் பிறந்தவர்.

கடந்த மாதம், பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், விகான் தொகுதி எம்.பி.,ஆக தேர்வானவர்.இந்த தேர்தலில், ஆளும் பழமைவாத கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதனால், எதிர் கட்சியான, தொழிலாளர் கட்சி தலைவர், ஜெரேமி கார்பைன், தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, தொழிலாளர் கட்சி தலைவருக்கான போட்டி துவங்கியது. அதில், இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற, ஐந்து எம்.பி.,க்களின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அதில், மூன்றாவது இடத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பெண் எம்.பி., லிசா நான்டி உள்ளார். முதலிடத்தில், 89 எம்.பி.,க்களின் ஆதரவுடன், கிர் ஸ்டார்மர் உள்ளார். அடுத்த இடத்தில், ஜெரேமி கார்பைன் ஆதரவாளரான, லாங் பெய்லி உள்ளார்.லாங் பெய்லிக்கும், லிசா நான்டிக்கும் முறையே, 33 மற்றும் 31 எம்.பிக்களின் ஆதரவு உள்ளது. கூடுதலாக மூன்று எம்.பி.,க்கள் ஆதரவு கிடைத்தால், கட்சி தலைவர் போட்டியில், இரண்டாவது இடத்தை பிடித்து விடலாம் என, லிசா நான்டி கடும் முயற்சி செய்து வருகிறார். இதற்காக, அதிருப்தி எம்.பி.,க்களின் ஓட்டுக்களை பெற, தீவிரமாக முயன்று வருகிறார்.

இதில் அவர் வெற்றி பெறுவாரா என்பதை, பிப்.,21 முதல் ஏப்.,2 வரை நடைபெறும் தபால் ஓட்டுக்கள் தீர்மானிக்கும். இதையடுத்து ஏப்.,4ல், புதிய தலைவர் பெயர் அறிவிக்கப்படும். அப்போது, ஜெரேமி கார்பைன், முறைப்படி, புதிய தலைவரிடம் பொறுப்பை ஒப்படைப்பார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X