இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
 இதே நாளில் அன்று


ஜனவரி, 15, 1998

குல்சாரிலால் நந்தா: பஞ்சாப் மாநிலம், சியால்காட் எனும் இடத்தில், 1898, ஜூலை, 4ல் பிறந்தார். முனைவர் பட்டம் பெற்ற இவர், 1921ல், மும்பை நேஷனல் கல்லுாரியில், பொருளாதார பாடத்திற்கான பேராசிரியரானார். 1950ல், நாட்டின் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக இருந்தார்.

கடந்த, 1951ல், மத்திய திட்டத் துறை அமைச்சரானார். 1957ல் நடந்த தேர்தலில், லோக்சபா, எம்.பி.,யான இவர், மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் திட்ட அமைச்சராக பொறுப்பேற்றார். 1962ல், மத்திய உள்துறை அமைச்சரானார்.

பிரதமராக இருந்த நேரு, 1964ல் மறைந்த போது, இடைக்கால பிரதமராக நந்தா தேர்ந்தெடுக்கப்பட்டு, 13 நாட்கள் பதவியில் இருந்தார். 1964ல் பிரதமரான, லால்பகதுார் சாஸ்திரி மறைவிற்குப் பின்னும், 13 நாட்கள் பதவியில் இருந்தார். கடந்த, 1997ல், நாட்டின் உயரிய, 'பாரத் ரத்னா' விருது பெற்ற இவர், 1998, ஜனவரி, 15ல் காலமானார்.

அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X