சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தன மரம் வெட்டிய கும்பல்

Added : ஜன 14, 2020
Advertisement

சேலம் : சந்தன மரம் வெட்டிய கும்பலுக்கு, 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வனச்சரகம், கோதுமை காப்புக்காட்டில், சந்தனமரம் வெட்டுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனவர்கள், மூன்று குழுக்களாக பிரிந்து, கடந்த, 9ல் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வனத்துறையினரை பார்த்ததும், ஒரு கும்பல் தப்பி ஓடிவிட்டது. அங்கு, கடத்த தயாராக வைத்திருந்த, 8.6 கிலோ சந்தன சிராயை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய்.அவர்கள், விட்டுச்சென்ற தடயங்களை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, கருமந்துறை, பாச்சாடு கிராமத்தை சேர்ந்த கோபால், 34, தங்கராசு, 57, அறிவழகன், 29, சோபிராஜ், 28, ஆகியோரை நேற்று வனத்துறையினர் பிடித்தனர். அத்துடன் அவர்களுக்கு தலா, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மாவட்ட வன அலுவலர் பெரியசாமி உத்தரவிட்டார். பின்னர், கடும் எச்சரிக்கைக்கு பிறகு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X