சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழக முதல்வர் வந்த விமானம் தாமதம் ஏன்?

Added : ஜன 14, 2020
Share
Advertisement

ஓமலுார் : போகி புகையால், தமிழக முதல்வர் வந்த விமானம், தாமதமாக சேலம் வந்தது.

போகி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில், நேற்று காலை பழைய பொருட்களை, பலர் எரித்தனர். இதனால் ஏற்பட்ட புகை, பனிமூட்டத்தால், சென்னை விமான நிலையம், புகை மண்டலமாக மாறியது. இதனால், 10:30 மணிக்கு சேலம் புறப்படவேண்டிய விமானம், தாமதமாக, 11:50க்கு புறப்பட்டது. அதில் வந்த முதல்வர் பழனிசாமி, 12:50 மணிக்கு, சேலம், காமலாபுரம் விமான நிலையம் வந்தார். அங்கு, கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, அ.தி.மு.க., நிர்வாகிகள், நீண்ட வரிசையில் நின்று சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X