கலிந்தி கஞ்ச் - ஷாயீன் பாக் சாலையை திறக்க ஆவன செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Added : ஜன 14, 2020
Advertisement

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்களை தொடர்ந்து, டில்லியின் கலிந்தி கஞ்ச் - ஷாயீன் பாக் சாலையில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை விலக்கிக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு, டில்லி போலீசாருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் மற்றும் மாணவர்கள், டில்லியில் தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, டில்லியில் உள்ள கலிந்தி கஞ்ச் - ஷாயீன் பாக் சாலையை, மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த, கடந்த மாதம் 15ல், போலீசார் தடை விதித்தனர்.டில்லியில் இருந்து, ஹரியானாவில் உள்ள பரீதாபாத் மற்றும் உ.பி.,யில் உள்ள நொய்டா ஆகிய இடங்களுக்கு செல்ல, மக்கள் இந்த சாலையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இது மூடப்பட்டுள்ளதால், டில்லி - நொய்டா விரைவு நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, நேர விரயமும், எரிபொருள் வீணாவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர்.இந்த சாலையை, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின், 'கடந்த ஒரு மாதமாக, இந்த சாலை மூடப்பட்டு இருப்பதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நலனை மனதில் கொண்டு, சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, இந்த சாலையை மீண்டும் திறக்க, போலீஸ் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X