பொது செய்தி

தமிழ்நாடு

போலி டாக்டர்கள் தடுக்க சட்ட முன்வரைவு அறிக்கை

Added : ஜன 14, 2020
Share
Advertisement

திருப்பூர் : போலி டாக்டர்களை தடுக்க, சட்ட முன்வரைவு அறிக்கையை, இந்திய மருத்துவர் சங்கம், தமிழக அரசிடம் வழங்கி உள்ளது.

'போலி டாக்டர்கள் தடுக்க சட்டம்' என்ற பெயரில், புதிய சட்ட முன்வரைவு அறிக்கையை, இந்திய மருத்துவர் சங்கம் தயாரித்து, தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.இந்திய மருத்துவர் சங்க, மாநில தலைவர் டாக்டர் ராஜா கூறியதாவது:போலி டாக்டர்களை கண்டறிந்து தடுக்க, போலி டாக்டர் தடுக்க சட்டம் என்ற, வரைவு அறிக்கையை அரசிடம் வழங்கியுள்ளோம். தமிழக அரசு, புதிய விதிமுறைகளுடன் கூடிய புதிய சட்டம் இயற்றும் போது, தமிழகத்தில் போலி டாக்டர்கள் இருக்க முடியாது.அரசு பள்ளி மாணவ - மாணவியருக்காக, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பேணும், 'ஹெல்த் கிளப்' பள்ளிகள் தோறும் திறக்கப்பட உள்ளது.

காது கேளாத குழந்தைகள், தைராய்டு பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.மாவட்ட வாரியாக, 'டாக்டர்கள் - நண்பர்கள்' என்ற குழு துவக்கப்படும். இதன்மூலம், ஒவ்வொரு டாக்டரையும், நண்பராக அணுகும் வாய்ப்பு உருவாகும். மருத்துவமனை மற்றும் டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில், மருத்துவமனை பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X