சிறுமியர் பலாத்கார வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Muzaffarpur,rape,சிறுமியர்,பலாத்காரம்Court,judgment

புதுடில்லி: பீஹாரின் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில், சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி தாக்கல் செய்துள்ள புதிய மனு மீது பதிலளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பீஹாரில், முசாபர்பூரில் உள்ள சிறுமியர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த, சில சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, 2018ல் தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரித்த, சி.பி.ஐ., அந்த பாதுகாப்பு இல்லத்தை நடத்தி வரும், பிரஜேஷ் தாக்குர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்தது. விசாரணை முடிந்த நிலையில், கடந்தாண்டு, நவ., 20ல் இருந்து, இரண்டு முறை தீர்ப்பு தேதி மாற்றி அமைக்கப்பட்டது.ஒ

ஒரு முறை நீதிபதி விடுமுறையில் சென்றதால், தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் போராட்டத்தால், இரண்டாவது முறையும், தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று(ஜன.,14) இறுதி விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. அப்போது, வழக்கின் முக்கிய குற்ற வாளியான பிரஜேஷ் தாக்குர், புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.


latest tamil news



அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின்போது, சி.பி.ஐ., சமீபத்தில் புதிய தகவலை தெரிவித்தது. 'இந்த பாதுகாப்பு இல்லத்தில், உயிரிழந்ததாகக் கூறப்படும் சில சிறுமியர் உயிருடன் உள்ளனர்' என, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. இதில் இருந்து, அரசு தரப்பு சாட்சியம் தரமானதாக இல்லை என்பது தெரியவருகிறது. அவர்களுடைய சாட்சி களை அடிப்படையாக வைத்து தீர்ப்பு அளிக்கக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அதையடுத்து, இது குறித்து இரண்டு நாட்களுக்குள் பதிலளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
15-ஜன-202009:47:32 IST Report Abuse
GMM பாதுகாப்பு இல்லத்தில் உயிர் இழந்ததாக சொல்லப்படும் சிறுமியர் உயிருடன் இருக்கிறார்கள். நீதிமன்ற செய்தி உலகம் முழுவதும் தெரிய வரும். பாலியல் பலாத்கார வழக்கு வேறு. சிறுமியர் எண்ணிக்கை மாறுபாடு வேறு. குறை தான். நேரடி தொடர்பு இருந்தால் CBI பதில் சொல்ல கேட்கலாம்.(உயிர் இழந்த ஆதார சான்று குற்றவாளி வக்கீல் கேட்டு இருக்க வேண்டும்.)
Rate this:
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
15-ஜன-202009:44:34 IST Report Abuse
Rajan அரசே துணை
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜன-202002:36:30 IST Report Abuse
தமிழ்வேல் பொழைச்சுக்குவான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X