கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு மைதானம்

Added : ஜன 14, 2020
Advertisement

மதுரை : மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டை பார்வையிட நிரந்தர பார்வையாளர் மாடம் அல்லது மைதானம் அமைக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அலங்காநல்லுாரில், ஜல்லிக்கட்டு பார்வையாளர்களுக்கு வசதி செய்து தருவதில்லை. மரம், வீடுகளின் கூரையில் அமர்ந்து, ஆபத்தான முறையில் பார்வையிடுகின்றனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டை பார்வையிட நிரந்தர மாடங்கள் அல்லது 5 ஏக்கர் பரப்பில் மைதானம் அமைக்க வேண்டும்.

காளைகளை அடக்கும் வீரர்களுக்கு, விளையாட்டுத் துறை இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அவர்களுக்கு அரசுப் பணி வழங்கக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, திருமுருகன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்து, தமிழக பொதுப்பணித் துறை செயலர், கால்நடைத் துறை செயலர், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X