மூன்று மாதமாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்

Added : ஜன 14, 2020
Advertisement

சேதுக்கரை, சேதுக்கரை அருகே கோரைக்குட்டம் கிராமத்தில் பாலம் சேதம் அடைந்துள்ளதால் கடந்த அக். முதல் மூன்று மாதங்களாக அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் அவதிப்படுகின்றனர்.அக். கடைசி முதல் டிச. வரை பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்றின் வழியாக கோரைக்குட்டம் ஆற்றின் தரைப்பாலம் முழுமையாக மூழ்கியது. டிச.15க்கு பிறகு தும்பு பாலத்தில் தண்ணீர் முழுமையாக வடிந்த நிலையிலும் அரசு பஸ் தடம் எண் 17 இதுவரை இயக்கப்படவில்லை.இதுகுறித்து கோரைக்குட்டம் கிராம ஊராட்சி தலைவர் செய்யது அப்தாகீர் கூறுகையில், கடலும், ஆறும் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் கோரைக்குட்டம் கிராமத்தை கடப்பதற்கு கடந்த 2004ல் 340 அடி நீளத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தும்பு பாலம் அமைக்கப்பட்டது.காட்டாற்று வெள்ள அரிப்பால், பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளதால் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் பாலத்தை சீரமைத்து பணிகளை செய்யவும், இரு பக்கமும் 1 அடியில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X