சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு: இடைத்தரகர் தொடர்பு அம்பலம்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (9)
Advertisement
TNPSC, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு, இடைத்தரகர், முறைகேடு,

சிவகங்கை: அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் - 4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணை நடக்கும் நிலையில், சிவகங்கை அருகே ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டதாக, புகார் எழுந்துள்ளது.

கடந்த செப்டம்பரில் நடந்த குரூப் - 4, வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியாகின. முதல், 100 இடங்களில் வெற்றி பெற்றவர்களில், 40 பேர், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரையில் தேர்வு எழுதியவர்கள்.மேலும், இந்த மையங்களில், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தேர்வு எழுதியதும், வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்கள், முதல் இடங்களை பிடித்தவர்களிடம், தேர்வாணைய அதிகாரிகள், இரண்டு நாட்களாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகங்கை, பெரியகண்ணனுாரைச் சேர்ந்த ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு, பலருக்கு பணி நியமனம் பெற்றுக் கொடுத்ததாக, புகார் எழுந்துள்ளது.

தேர்வர்கள் சிலர் கூறியதாவது:அந்த நபர், சென்னையில் உள்ள அரசுத் துறையில் பணிபுரிகிறார். தேர்வாணைய அதிகாரிகள் சிலர் உதவியுடன், மூன்று ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வாங்கி கொடுத்துள்ளார். கடந்த, 2017- - 18ல் நடந்த குரூப் - 2 ஏ தேர்வில், பலருக்கு பணி கிடைத்துள்ளது. இதில் பலர், வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள். குரூப் - 2 ஏ பணி நியமனத்துக்கு, 13 லட்சம் ரூபாய், குரூப் - 4க்கு, 9 லட்சம் ரூபாய் வரை, அவர் வாங்கி உள்ளார். அவரது உறவினர்கள், அடுத்தடுத்து பணி நியமனம் பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதும் முன், சென்னையில் இதற்காக பயிற்சி கொடுக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்பர். இவ்வாறு பல முறைகேடுகள் நடந்துள்ளன. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARUL - maruthamputhur,இந்தியா
16-ஜன-202008:25:07 IST Report Abuse
ARUL TRB, TNPSC என பலவேறு போட்டி தேர்வுகளில் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ள நிலையில், TRB இன் அரசு கலை கல்லூரி பேராசிரியர்கள் பதவிக்கு எந்த போட்டி தேர்வும் இல்லாமல், வெறும் interview வைத்தே பணிக்கு ஆள் எடுக்க போகிறார்கள். இது எப்படி நேர்மையாக நடைபெறும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு கேள்விகள் தயார் செய்யும் பேராசிரியர் பதவிக்கு மட்டும் போட்டி தேர்வு இல்லை என்பது என்ன கொள்கை முடிவோ?. இந்த பேராசிரியர்கள் தான் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்து தயார் செய்ய வேண்டும் என்பதும் அரசின் விசித்திரமான உத்தரவு. நீச்சல் தெரியாதவர்கள் நீச்சல் பயிற்சி வழங்க வேண்டும் என்பது போன்றது இது. ஊடகங்களே புரிந்துகொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Senthamizhsudar - Chennai,இந்தியா
15-ஜன-202016:18:24 IST Report Abuse
Senthamizhsudar அவர்களை தூக்கில் போடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஜன-202012:11:40 IST Report Abuse
Lion Drsekar இது இன்றைக்கு நடைபெறும் செயலை? சுதந்திரம் பெற்றது முதலே நடந்து கொண்டு இருப்பதுதானே ? தற்போது வெளிச்சத்துக்கு வருகிறது, வந்து என்ன பயன்? முன்பு இதே போன்று மூன்றெழுத்து படித்தவர்களின் தேர்வும் இதே போன்று நடந்தகாக செய்தி வந்தது, ஆனால் பணியில் சேர்ந்து விட்டதால் அவர்களை பதவி நீக்கம் செய்யவில்லை, என்னதான், எத்தனைதான் கமிஷன் வைத்தாலும் அவையும் ஒன்று முறையாக நடக்காது அப்படியே நடந்தாலும் முடிவு என்ன என்பது அந்த கமிஷனுக்கே தெரியாது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X