சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாட்டிலேயே முதன் முறையாக அகற்றப்பட்ட பெரிய இருதய கட்டி

Added : ஜன 14, 2020
Advertisement

மதுரை : நாட்டிலேயே முதன்முறையாக நோயாளி ஒருவரின் இருதயத்தில் இருந்த மிகப்பெரிய கட்டியை மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 11 வயது சிறுமி மூச்சுத்திணறல், நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, இம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை இருதய நெஞ்சக அறுவை சிகிச்சை டாக்டர்கள் சோதித்தனர். ஸ்கேன் பரிசோதனையில் சிறுமியின் இருதயத்தின் வலது பக்கம் முழுவதும் கட்டி இருப்பதும், அது ரத்த ஓட்டத்தை பாதிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.திசுப் பரிசோதனையில் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் அரிதான கட்டி என தெரிந்தது. முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கட்டியை டாக்டர்கள் அகற்றினர்.

கட்டி 9 செ.மீ., நீளம், 6 செ.மீ., அகலம், 4 செ.மீ., உயரம், 150 கிராம் எடை இருந்தது. சிகிச்சைக்குப் பின் சிறுமி உடல் நலம் தேறினார். சிகிச்சையளித்த டாக்டர்கள் மர்வின், ரத்னவேல், கல்யாண சுந்தரம், செல்வக்குமார் ஆகியோரை டீன் சங்குமணி பாராட்டினார்.டீன் கூறுகையில், ''நாட்டில் இருதயத்தில் இருந்து அகற்றப்பட்ட பெரிய கட்டி இது. தனியார் மருத்துவமனையில் இதற்கு ரூ.5 லட்சம் செலவாகும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X