பொது செய்தி

தமிழ்நாடு

உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜன 14, 2020
Advertisement

ராமநாதபுரம், ராமநாதபுரம் வடக்கு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் பணியிடம் அரசு விதிகளின் படி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடம் இனச் சுழற்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமை பெற்றவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தகுதியாவனர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன், நீச்சல் மற்றும் மீன் பிடிக்க தெரிந்திருக்க வேண்டும். புதிதாக மீன் பிடி வலை பின்னவும் மற்றும் அறுந்த வலைகளை சரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். மீன்துறையின்கீழ் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.வயது வரம்பு 18முதல் 30 வரை. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, கல்வி, சாதி சான்றிதழ்களுடன் பிப்.5க்குள் மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ராமநாதபுரம், என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சலில் அனுப்பி வைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04567-231402 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X