சர்வர் பழுதால் நோயாளிகள் தவிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகள் சீட்டு பதிவு செய்வதில் சர்வர் பழுதால் தவிக்கின்றனர்.மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வருகின்றனர். இங்கு அவசர சிகிச்சை பிரிவு, கண், இருதயசிகிச்சை, குழந்தைகள் தீவிர சிகிச்சை, பிரசவ பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, தீக்காய சிகிச்சை,அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ளன. மற்ற பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுவோர் வருகின்றனர்.வெளி நோயாளிகள் சீட்டு பதிவு செய்வதற்காக தினமும் காத்திருக்கின்றனர். இதில் தமிழகம் முழுவதும் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தினர் சார்பில் ஆன் லைன் மூலம் நோயாளிகளுக்கு சீட்டு பதிவு செய்யப்படுகிறது. இதில்டாக்டர்களுக்கு நோயாளிகள் குறித்த குறிப்பு வழங்கப்படுகிறது.டாக்டர்கள் பரிந்துரை செய்த மருந்து, மாத்திரைகள் குறித்தும் பதிவு செய்யப்படுகிறது. மருந்து மாத்திரை வழங்குபவர்கள் ஆன் லைனில் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்க பரிந்துரை செய்த மருந்து, மாத்திரைகள், ஊசிகளை நோயாளிகளுக்கு வழங்குகின்றனர்.தினசரிகாலை 10:00 முதல் 11:00 மணி வரை சர்வர் பழுதால் ஆன் லைன் செயல்படுவதில்லை. இதனால் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வரும் நோயாளிகள் வரிசையில் நிற்க முடியாமல் சீட்டு பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் கூறுகையில், தமிழகம் முழுவதும்டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஆன் லைன் மூலம் பதிவு செய்கிறது. காலை 10:00 முதல் 11:00 மணி வரை சர்வர் பழுதால் பாதிக்கப்படுகிறது. இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X