பொது செய்தி

தமிழ்நாடு

அகத்தியர் கோயிலில் கன்னிகா, கோ பூஜை

Added : ஜன 14, 2020
Advertisement

கீழக்கரை, கீழக்கரை அருகே அகத்தியர் கோயிலில் தர்ம ரக்ஷண ஸமிதியின் சார்பில் நீரின் அவசியம் கருதி கங்கா, காவிரி கலச யாத்திரை, கன்னிகா, கோ பூஜைகள் நடந்தது. விவேகானந்தா கேந்திரத்தின் ராமேஸ்வரம் பொறுப்பாளர் சரஸ்வதி துவக்கி வைத்தார்.கீழக்கரை சித்தி விநாயகர் கோயில், தட்டாந்தோப்பு தெரு நாராயணசுவாமி கோயிலில் இருந்து 504 கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, பெண்கள் தலையில் சுமந்தவாறுகோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.வருண ஜெபம், கோ பூஜை, கன்னிகா பூஜைகளை செய்யப்பட்டு, மூலவர் அகத்தியருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சிவகங்கை குருக்கள் முத்துவடுகநாத சிவம் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை அகத்தியர் ஆசிரம நிர்வாகத்தினர், தர்ம ரக்ஷண ஸமிதியினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X