பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை கொள்முதல் நிறைவுஏலக்காய் விலையில் சரிவு துவக்கம்

Added : ஜன 14, 2020
Advertisement

கம்பம் : பொங்கல் பண்டிகை கொள்முதல் முடிந்ததால் ஏலக்காய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சராசரி விலை கிலோ ரூ. 3 ஆயிரத்து 680 ஆக குறைந்துள்ளது.

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் அதிகபரப்பில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஏலக்காய் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்தது. சராசரி விலை கிலோ ரூ.4 ஆயிரத்து 400 வரை சென்றது. ஆனால் கடந்த சில நாட்களாக விலை இறங்குமுகமாக உள்ளது. நேற்று சராசரி விலை கிலோவிற்கு ரூ. 3 ஆயிரத்து 680க்கு விற்றது.மார்க்கெட்டிங் நிபுணர்கள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிய பரிசு தொகுப்பிற்காக மாவட்ட வாரியாக ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

எனவே விலையில் ஏற்றம் இருந்தது. மேலும் பொங்கல் பயன்பாடும் அதிகம் இருக்கும். இந்நிலையில் பொங்கல் கொள்முதல் முடிவிற்கு வந்ததால், விலையில்இறங்குமுகம் ஏற்பட்டுள்ளது,'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X