பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில்  பொங்கல் விழா கோலாகலம்

Added : ஜன 14, 2020
Advertisement

ராமநாதபுரம், : ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது.தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்யதம்மாள் அறக்கட்டளைஉறுப்பினர்கள் டாக்டர்கள் பாத்திமா, பாத்திமா சானாஸ், ராசிகா ரியாஸ்,ஆயிசத்துல் நசீதா,பரினாபேகம் ஆகியோர் பங்கேற்றனர்.கல்லுாரி வளாகத்தில் பொங்கலிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தமிழ் சங்க தலைவி பேராசிரியை தேன்மொழி, பேராசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.ராமநாதபுரம் செய்யதம்மாள் பப்ளிக் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் தாளாளர் ராஜாத்தி, முதல்வர் விசாலாட்சி, ஆசிரியர்கள், மாணவர்கள்பங்கேற்றனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.ராமநாதபுரம் லுாயிஸ் லெவேல் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. முதல்வர் அருள்மேரி, மலேசியா பினாங்கு மாநில தமிழ்நேசன்பத்திரிகையாளர் பாலன் தனது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. ஆசிரியர்கள் பன்னீர் செல்வம், ராமச்சந்திரன்மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.மண்டபம் ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியர் கோமகன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இடைநிலை ஆசிரியர் திருமேனி நாயகம் வரவேற்றார். மாணவ, மாணவிகள் வேட்டி, சேலை அணிந்து பங்கேற்றனர். ஏற்பாடுகளை சத்துணவு அமைப்பாளர் தங்கம், சமையல் உதவியாளர் லெட்சுமி, எய்டு இந்தியா ஆசிரியை காயத்ரி செய்திருந்தனர்.*கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில் நுட்ப கல்லுாரியில் கல்லுாரி தலைவர் அகமது யாசின் தலைமையிலும்,முதல்வர் சரவணன் முன்னிலையிலும் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. புகையில்லா பொங்கல் விழா கொண்டாட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.* கமுதி அருகே பசும்பொன் மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கல்லூரி செயலாளர் ஜேசுமேரி தலைமையிலும், முதல்வர் முனைவர் மைக்கேல் ஜேம்ஸ் சகாயம் முன்னிலையிலும் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் பொங்கலிட்டு கொண்டாடினர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் சகாயம், ராஜாத்தி, பிரபா, கனிமொழி, அனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.* கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் ரவி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் (கிராம ஊராட்சிகள்) முன்னிலையில் பணியாளர்கள் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியேந்திரன், வீரபாண்டி, முனியசாமி, இளங்கோவன், மேளாளர் சங்கரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.*கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் இளவரசி தலைமையில் பொங்கலிட்டனர். பேரூராட்சி பணியாளர்களுக்கு இலவசமாக கரும்புகள் வழங்கப்பட்டது.*கமுதி சத்ரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் வசந்தா தலைமையில் பொங்கலிட்டு கொண்டப்பட்டது. மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.*கமுதி அபிராமம் அகத்தாரிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா, தலைமை ஆசிரியை ஜென்னட் ஜெயகுணா தலைமையில் நடந்தது. ஆசிரியர்கள் வளர்மதி, செல்லத்தாய், சாகுல்ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர்.அபிராமம் அருகே அல் ஹாதி நர்சரி பள்ளியில் தாளாளர் காஜா நஜூமுதீன் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.*ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,ராஜா தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பி.டி.ஓ.,( கி.ஊ) செல்லம்மாள், துணை வட்டார வளர்ச்சி அலுவர் கோட்டைராஜ், அலுவலர்கள் மகிழமுத்து, காளீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.*திருவாடானை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் இலக்கியா தலைமையில் விழா கொண்டாடப்பட்டது. துணைதலைவர் மகாலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. அச்சங்குடியில்கணேசன், நெய்வயலில் ஆசை ராமநாதன், பழங்குளத்தில் கருப்பையா, அஞ்சுகோட்டையில் பூபாலன் உள்ளிட்ட 47 ஊராட்சிகளிலும் பொங்கல் விழாநடந்தது.திருவெற்றியூர் புனித நார்பர்ட் உயர்நிலை பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில்ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் தலைமை வகித்தார். பள்ளி தாளளர் பவுல்ராஜ்வரவேற்றார்.முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை நன்றி கூறினார்.* ராமேஸ்வரம் அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் வேலுச்சாமி, பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை கமலா, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமையில் ஆசிரியர்கள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாம் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் காயத்ரி தலைமையில் சமத்துவ பொங்கலிட்டனர். இதில் செவிலியர் கண்காணிப்பாளர் சத்யபாமா, ஊழியர்கள் கோபிநாதன், செந்தில்நாதன் பங்கேற்றனர்.*திருப்புல்லாணி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடந்தது. வேளாண்மைத்துறை உதவி இயக்குனர்அமர்லால், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுகன்யா பங்கேற்றனர்.* திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர்வன்னிமுத்து, ஊராட்சி தலைவர் கஜேந்திர மாலா, துணைத்தலைவர் தாஹிரா பீவி, சமூக ஆர்வலர்கள் ஆனந்தன், அப்துல் வகாப், ஆசிரியர்கள் சாந்தி, ராஜலட்சுமி, இருதய அரசி,மகாலட்சுமி, காயத்திரி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்குகள் வழங்கப்பட்டது.*பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்வி மாவட்ட அலுவலர் கருணாநிதி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர்கள்கோவிந்தன், பாலாஜி முன்னிலை வகித்தனர். பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்த் வரவேற்றார். கீழ முஸ்லிம் பள்ளித் தலைமையாசிரியர்அஜ்மல்கான் நன்றி கூறினார்.*முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா தலைமைஆசிரியர் ஜோசப் விக்டோரியா ராணி தலைமையில் நடந்தது. காமராஜர் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் செல்வக்குமார் தலைமையிலும், முதுகுளத்துார் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில்.கல்வி அறக்கட்டளை தலைவர் அசோக்குமார், தாளாளர் ரெங்கநாதன் தலைமையில்,முதல்வர் கோவிந்தராஜன் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. துணை முதல்வர் முகமது யூசுப் நன்றி கூறினார்.பூக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் ஆசிரியர்கள் மெர்சி கரோலின், மல்லிகா முன்னிலையில் கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X