தமிழ்நாடு

பரமக்குடி அருகே புதிய ரக நெல் விளைச்சல் அறுவடை செய்த கலெக்டர்

Added : ஜன 14, 2020
Advertisement

பரமக்குடி, பரமக்குடி அருகே வளையனேந்தல்கிராமத்தில்சாகுபடி செய்யப்பட்ட வறட்சியை தாங்கும்புதியரக நெல்அறுவடையைகலெக்டர் வீரராகவராவ்துவக்கி வைத்தார்.மகசூலை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் நோக்கிலும் பாபா அணுஆராய்ச்சி நிலையம் சார்பில், பல்வேறு நெல்ரகங்கள் சோதனை முறையில் பயிரிடப்பட்டு வருகிறது.இதன் படி2019 ஜூலை 26ல்நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில்பாபா ஆராய்ச்சி நிலையத்தால்வெளியிடப்பட்ட நெல், பயறு,எண்ணெய் வித்து பயிர்களின்ரகங்கள் குறித்து விஞ்ஞானி டேனியல்செல்லப்பா எடுத்துரைத்தார்.தொடர்ந்து வளையனேந்தல் கிராமத்தில் 2019 செப்.,ல் விஞ்ஞானிடேனியல் செல்லப்பா, டி.சி.சி.எம்.1 துப்புராஜ் என்னும் புதிய ரக நெல்லை தமிழகத்தில் முதன் முறையாக அறிமுகம் செய்தார். பின்,பரமக்குடி ஒன்றியம் வளையனேந்தல் கிராமத்தில் முன்னோடி விவசாயிதுரைராஜிடம் 5 கிலோ நெல்லை வழங்கி, கலெக்டர் வீரராகவராவ் விதைதுாவி பணியை துவக்கி வைத்தார். பயிர்கள் 102 நாட்களில் வளர்ந்து நல்லமகசூலை எட்டியுள்ளன.தானே விதை துாவி துவக்கிய பணியை நேற்று கலெக்டர் அறுவடை செய்தார்.குறைந்த நாட்களில் வறட்சியை தாங்கி வளரும் புதிய ரகம் வெற்றிகரமாகபலன் தந்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X