சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு சர்ச்சை ; சிவகங்கையில் இடைத்தரகர்

Added : ஜன 14, 2020
Advertisement

சிவகங்கை : அரசுப்பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) குருப்- 4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணை நடக்கும் நிலையில், சிவகங்கை அருகே பெரியகண்ணனுாரை சேர்ந்த ஒருவர் இடைத்தரகராக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இவரது உறவினர்கள், நண்பர்கள் பலர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று பணியில் சேர்ந்துள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.கடந்த செப்டம்பரில் நடந்த குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகின. முதல் 100 இடங்களில் வெற்றி பெற்றவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரையில் தேர்வு எழுதியவர்கள். மேலும் இந்த மையங்களில் வெளி மாவட்டத்தை சேர்ந்த பலர் தேர்வு எழுதியதும் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்கள், முதல் இடங்களை பிடித்தவர்களிடம் தேர்வாணைய அதிகாரிகள் இரண்டு நாட்களாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை பெரியகண்ணனுாரைச் சேர்ந்த ஒருவர் இடைத்தரகராக செயல்பட்டு பலருக்கு பணி நியமனம் பெற்றுக்கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து தேர்வர்கள் சிலர் கூறியதாவது:அந்த நபர் சென்னையில் உள்ள அரசுத்துறையில் பணிபுரிகிறார். தேர்வாணைய அதிகாரிகள் சிலர் உதவியுடன் மூன்று ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வாங்கி கொடுத்துள்ளார். 2017--18ல் நடந்த குரூப்- 2ஏ தேர்வில் பலருக்கு பணி கிடைத்துள்ளது.

இதில் பலர் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள்.குரூப்- 2ஏ பணி நியமனத்துக்கு ரூ.13 லட்சம், குரூப்- 4 க்கு ரூ.9 லட்சம் வரை அவர் வாங்கி உள்ளார். அவரது உறவினர்கள் அடுத்தடுத்து பணி நியமனம் பெற்றுள்ளனர். தேர்வு எழுதும் முன் சென்னையில் இதற்காக பயிற்சி கொடுக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என்பார்கள். இவ்வாறு பல முறைகேடுகள் நடந்துள்ளன. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X