பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி - புடின் பேச்சு: சர்வதேச பிரச்னைகள் அலசல்

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (8)
Advertisement
Modi, பிரதமர் ,மோடி , விளாடிமிர்_புடின்,  பேச்சு, சர்வதேச_பிரச்னைகள்

புதுடில்லி: பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் தொலைபேசியில் பிராந்திய சர்வதேச பிரச்னைகள் குறித்து பேசினர்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது புடினுக்கும் ரஷ்ய மக்களுக்கும் அவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியதை நினைவு கூர்ந்தார். இந்திய மக்கள் அமைதியும் மகிழ்ச்சியும் வளமும் பெற்று வாழ புடின் வாழ்த்தினார். இரு தலைவர்களும் பிராந்திய சர்வதேச பிரச்னைகள் குறித்தும் பாதுகாப்பு அமைதி ஸ்திரத்தன்மை தொடர்பாகவும் ஆலோசித்தனர். இந்தாண்டு அனைத்து துறைகளிலும் இந்தியா - ரஷ்யா இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டனர்.

மே மாதம் ரஷ்யாவின் 75வது வெற்றித் திருநாள் விழாவில் பங்கேற்க மோடிக்கு விடுத்த அழைப்பை புடின் நினைவு கூர்ந்தார். அதுபோல இந்தாண்டு ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மற்றும் 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆவலாக உள்ளதாக மோடி தெரிவித்தார். அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றமான நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருடன் மோடி பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
15-ஜன-202018:42:13 IST Report Abuse
Sandru இது சர்வதேச பிரச்னை இல்லை. சர்வாதிகாரிகள் பிரச்னை பற்றி விவாதிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Madurai Karan - Madurai,இந்தியா
15-ஜன-202012:48:07 IST Report Abuse
Madurai Karan நல்லது. இந்த புரட்சி, புண்ணாக்கு, பொருளாதரத்தில் புலிகளான போராளிகளை பற்றி கவலைப்படாமல் நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள். மக்கள் இவர்களை ஒதுக்கி தள்ளி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
15-ஜன-202011:37:39 IST Report Abuse
Rajas சர்வதேச பிரச்சினைகள் அலசல் இந்திய பொருளாதாரமும் வருமா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X