மாணவர்கள் களப்பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் களப்பயணம்

Added : ஜன 15, 2020

காளையார்கோவில்:காளையார்கோவில் அருகே சிலந்தங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து கீழகோட்டை அரசு நடுநிலைப்பள்ளிக்கு, பள்ளி பரிமாற்ற திட்டத்தின் கீழ் மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராணி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் இந்திராணி முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்றார். கல்வியின்முக்கியத்துவம் குறித்து தலைமையாசிரியர்தெய்வானை, தன் சுகாதாரம் குறித்து தலைமையாசிரியர் அழகம்மை பேசினர். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பயணத்தின் ஒருபகுதியாக ஆதீனமிளகி அய்யனார் கோயிலுக்கு மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.ஆசிரியர்கள் மீனாட்சி, அமலதீபா, பாண்டியம்மாள், கீதா, கவிதா, அஜிதா, பாண்டியன்பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X