பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் களைகட்டிய பொங்கல் சந்தை

Added : ஜன 15, 2020
Advertisement

காரைக்குடி, :காரைக்குடி அருகே உள்ள பள்ளத்துாரில் நடந்த பொங்கல்சந்தையில், மக்கள் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.பள்ளத்துார் ஊராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைசந்தை கூடும். இச்சந்தைக்கு, செட்டிநாடு, புதுவயல், கொத்தரிஉள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்துசெல்வர். பொங்கல் விழாவையொட்டி நேற்று சிறப்பு சந்தை நடந்தது.இதில், மண்பானை, மண் அடுப்பு, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு வந்திருந்தது. கிராம மக்கள் இதனை ஆர்வமாக வாங்கி சென்றனர். மண்பானை ரூ. 50லிருந்து, ரூ.100, ரூ.200 வரைவிற்கப்பட்டது. கடந்த ஆண்டை விட கரும்பின் விலை அதிகரித்துஇருந்தது. ஜோடி கரும்பின் விலை ரூ.80 ல் இருந்து ரூ.100 வரைவிற்பனையானது. 10 கரும்பு கட்டு ரூ.450க்கும், 15 கரும்பு கட்டுரூ.550 க்கும் விற்பனையானது.ராமன் கூறுகையில்;தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல்பண்டிகையை ஒட்டி வெளியூரில் உள்ளவர்கள் அனைவரும் சொந்தகிராமங்களுக்கு வந்து விட்டோம். கிராமங்களில் பொங்கல்வைப்பதற்கு, மண் அடுப்பு, மண்பானை தான் பயன்படுத்துவோம். பலஇடங்களுக்கு பொங்கல் பொருட்களை தேடி அலையாமல் ஒரேஇடத்தில் அனைத்து பொருட்களும் சந்தையில் கிடைத்தது.விலைவாசி தான் உச்சத்திற்கு சென்று விட்டது. என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X