பொது செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டையில் பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement

சிவகங்கை, சிவகங்கை அரசனி முத்துப்பட்டி நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஆர்.டி.ஓ., தாசில்தார், வருவாய் ஆய்வாளர், தலையாரி மற்றும் பலர் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு ஆசிரியர் அருண்கணேஷ் வரவேற்றார். ஆசிரியர் ஜெயலதா நன்றி கூறினார்.* சிவகங்கை நேரு பஜார் ஸ்ரீமகாத்மா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு உறியடித்தல், பல்லாங்குழி போட்டி நடத்தப்பட்டது. கும்மியடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.*பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி செயலர் ஜே.அசோக், முதல்வர் ஆர்.ராஜராஜேஸ்வரி தலைமை வகித்தனர். மாணவிகள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர். விழாவையொட்டி உறியடி மற்றும் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. திருப்புத்துார்:

தேவகோட்டை:

முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன் வரவேற்றார். திருப்புத்துார் பாதிரியார் சந்தியாகு பொங்கல் வைப்பதற்குரிய பொருட்களை வழங்கினார்.ராம்நகர் பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினரும் பொங்கல் வைத்தனர்.ஆண்கள்,பெண்களுக்கு தனித்தனியாக கயிறு இழுத்தல் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பரிசு வழங்கினார்.காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமையேற்றார். விழாவில முன்னாள் துணைவேந்தர்கள் சிவசுப்பிரமணியன், கன்னியப்பன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், குருமூர்த்தி, சங்கரநாராயணன், கருப்புச்சாமி, தேர்வாணையர் உதயசூரியன், நிதி அலுவலர் சந்திரமோகன்,பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளியல் பொங்கல் விழா நடந்தது. தாளாளர் சத்தியன்தலைமை தாங்கினார். விழாவில், மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையணிந்து வந்தனர். கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்டபல்வேறு போட்டிகள் நடந்தது. பட்டிமன்ற பேச்சாளர் ஸ்டீபன்மைக்கேல் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் கணேஷ்குமார், தலைமையாசிரியை உமா மகேஸ்வரி மாணவர்களைபாராட்டினர்.காரைக்குடி ராஜாஸ் ஹெரால்டு பள்ளி மற்றும்எஸ்.ஆர்.கல்வி நிறுவனத்தில் சார்பில், சமத்துவ பொங்கல் விழாநடந்தது. தலைமையாசிரியர் உமா மகேஸ்வரிதலைமையேற்றார். வழக்கறிஞர் அப்துல் சித்திக் முன்னிலைவகித்தார். தாளாளர் ராஜா முகமது கலந்து கொண்டார். மாணவர்கள் பொங்கல்வைத்து கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X