பொது செய்தி

இந்தியா

மகரஜோதிக்கு பக்தர்கள் குவிந்தனர் ஜன.18 வரை திருவாபரண தரிசனம்

Added : ஜன 15, 2020
Advertisement

சபரிமலை : சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்துள்ளனர். ஜன.18 வரை திருவாபரணம் அணிந்தபடி மூலவரை தரிசிக்க முடியும்.

இன்று மகரஜோதி நிறைவு பெற்ற பின் ஜன. 21- காலை 6:30 மணி மணி வரை நடை திறந்துஇருக்கும்.ஜன.18- வரை தினமும்இரவு 9:30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் இருந்து சுவாமி 18-ம் படி முன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன.19ல் சரங்குத்திக்கு எழுந்தருள்வார்.மாளிகைப்புறம் கோயில் பின்புறம் உள்ள மணி மண்டபத்தில் ஜன.15 முதல் 19 வரை 'களம் எழுத்து' என்ற கோலமிடும் நிகழ்ச்சி நடைபெறும். ஐப்பனின் மாறுபட்ட முகதோற்றம் நான்கு நாட்களும் வண்ண பொடிகளால் வரையப்படும்.ஜன.16 முதல் 20- வரை தினமும் இரவு 7:00 முதல் 8:00 வரை படி பூஜை நடைபெறும். இந்த நாட்களில் மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்கள் 18-ம் படியேற முடியாது.

ஜன.19-ம் தேதி காலை 10:00 மணியுடன் நெய் அபிேஷகம் நிறைவு பெறும். பின்னர் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு களபாபிஷேகம் நடைபெறும்.ஜன.19-ம் தேதி காலை பத்து மணிக்கு பின்னர் சன்னிதானம் வருபவர்கள் நெய்யபிஷேகம் செய்ய முடியாது.ஜன.15ம் தேதி மாலை முதல் 18ம் தேதி இரவு வரை பக்தர்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்கலாம்.ஜன.20-ம் தேதி இரவு 10:00 மணியுடன் பக்தர்கள் தரிசனம் நிறைவு பெறும். 10:30-க்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடைபெறும்.நடை அடைப்புஜன.21-ம் தேதி காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி பிரதீப்குமார் வர்மா சன்னதி முன் வருவார்.

மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி கோயில் நடைஅடைத்து 18-ம் படியின் கீழ்பகுதிக்கு வந்து சாவியையும், பண முடிப்பையும் மன்னர் பிரதிநிதியிடம் கொடுப்பார்.அதை பெற்றுக்கொண்டு மீண்டும் சாவி, பண முடிப்பை மேல்சாந்தியிடம் மன்னர் பிரதிநிதி திரும்ப வழங்கி, பூஜைகளை முறையாக நடத்தக்கோரி திருவாபரணங்களுடன் விடைபெறுவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X