பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்

Added : ஜன 15, 2020
Advertisement

சபரிமலை : சபரிமலையில் இன்று மகர ஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி மகரசங்கரமபூஜை இன்று அதிகாலை 2:09 மணிக்கு நடந்தது.

இன்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியில் திருவாபரண பவனிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பளிப்பர். மாலை 6:25 மணிக்கு சன்னிதானத்தில் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை பெற்று சுவாமிக்கு அணிவித்து தீபாராதனை நடைபெறும். தீபாராதனை முடிந்த சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் தெரியும். தொடர்ந்து மகரஜோதி மூன்று முறை காட்சி தரும்.சூரியன் தனுசு ராசியில்இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் ஐயப்பனுக்கு மகரசங்கரம பூஜை நடத்தப்படும். இந்தாண்டு இன்று அதிகாலை 2:09 மணிக்கு இந்த பூஜை நடந்தது.திருவிதாங்கூர் கவடியார்அரண்மனையிலிருந்து கொடுத்துவிடப்பட்ட நெய் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஜோதி தரிசனத்திற்காக புல்மேட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கட்டடங்கள், மரங்கள் மற்றும் மலை சரிவுகளில் பக்தர்கள் நின்று ஜோதி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 9:00 மணி முதல் வடசேரிக்கரையில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பையில்இருந்து மதியத்துக்கு பின்னர் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிதடை விதிக்கப்பட்டுள்ளது.இரவு 8:00 மணிக்கு பின்னர் இவர்கள் மலை ஏறலாம். மகரஜோதிக்கு முன்பாக பிம்பசுத்தி பூஜை நேற்று காலை நடந்தது.இதற்கிடையில் களியக்காவிளை பயங்கரவாதிகள் தாக்குதலால், போலீசாரின் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகசெய்தியாளர்களுக்கு செக்மகரவிளக்கு செய்தி சேகரிக்க கேரள பத்திரிகையாளர்களுக்கு எவ்வித கெடுபிடி இன்றி சிறப்பு பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் தமிழக செய்தியாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின்அடையாள அட்டை நகல், அரசு அங்கீகார அடையாள அட்டை நகல் பெறப்பட்டது. இது குறித்து கேட்டதற்கு, களியக்காவிளையில் பயங்கரவாதிகள் தாக்குதல்நடந்ததால், போலீஸ் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தேவசம்போர்டு மக்கள் தொடர்பு அலுவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X