துாய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு முகாம்

Added : ஜன 15, 2020

ஆண்டிபட்டி, பிரதமரின் துாய்மை பாரத இயக்கம் குறித்து ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி மாணவர்கள் சார்பில் பிச்சம்பட்டியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.பள்ளி தாளாளர் ெஹன்றி அருளானந்தம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளி ஆலோசகர் பிரைசலின் ஒருங்கிணைப்பு பணிகள் செய்தார். பள்ளி மாணவர்கள் ஊராட்சி அலுவலகம், கிராம சாவடி முன் குப்பை அகற்றி துாய்மைப்பணிகளை மேற்கொண்டனர். கிராமத்தில் சுகாதார மேம்பாடு, குப்பை இல்லாத கிராமத்தை உருவாக்குவது, கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தமாக வைத்துக் கொள்வது, அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய சுகாதாரப் பணிகள், மேற்கொள்ளும் விதம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.-------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X