பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகுளத்தில் துணைமுதல்வர் பிறந்தநாள்விழா

Added : ஜன 15, 2020
Advertisement

பெரியகுளம், பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடினர்.இதையொட்டி பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு, சாய்பாபாவிற்கு சிம்மாசனம், திருவாச்சி, பொற்குடையை, டிரஸ்டிஸ்கள் டாக்டர் முத்துவிஜயன், வர்த்தக பிரமுகர் முத்துமகேஷ்வரனிடம் வழங்கினார். அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், வடிவமைத்த ஸ்ரீ கண்ட ஸ்தபதி உடனிருந்தனர்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர், கம்பம் ரோடு காளியம்மன், வரதராஜப்பெருமாள், கைலாசநாதர், ஷீரடி சாய்பாபா கோயில்களில் சிறப்பு அபிேஷகம், பூஜை நடந்தது.கலெக்டர் பல்லவிபல்தேவ், சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., தேனி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தயாளன், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பூங்கொத்து கொடுத்து துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.போடி: போடி அருகே ஆதிபட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு, ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் விழா, மாவட்ட குழந்தைகள் நலகுழுத்தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. பூதிப்புரம் பேரூராட்சி செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். ஆதரவற்றோர் இல்ல நிறுவனர் ராஜரத்தினம் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி சார்பில், தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கியதோடு, சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டார். வலையபட்டி கிளை செயலாளர் முத்துக்குமார், மாவட்ட முன்னாள் பொருளாளர் சின்னக்காளை, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய செயலாளர் செல்வம், இளைஞரணி இணை செயலாளர் கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X