பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி, கல்லுாரியில் பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement

ராஜபாளையம், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவினை கல்லுாரி முதல்வர் வெங்கட்ராமன், சுய நிதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ்வரன் துவக்கி வைத்தனர். சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாணவிகள் கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக வேட்டி சேலை அணிந்து பொங்கல் வைத்தனர்.*ராஜபாளையம் எஸ்.ஏ.கே.வி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பள்ளி நிர்வாகிகள் பால்கண்ணன், ராஜேந்திரன் மற்றும் காளிமுத்து தலைமை வகித்தனர். புகையில்லா போகியை கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி முதல்வர் சல்வதி இரிக்குபானியா நன்றி கூறினார்.* ராஜபாளையம் வைமா வித்யாலயா பள்ளியில் பாரம்பரியக் கலைகளான கும்மி, கோலாட்டம், சிலம்ப கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் சுற்று சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் விதமாக புகையில்லா பொங்கல் விழாவாக கொண்டாடப் பட்டது.காரியாபட்டி

காரியாபட்டி கல்குறிச்சி ஸ்ரீ போகர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் பிரபாகர், முதல்வர் தவமணி முன்னிலை வகித்தனர். கோலம், கவிதை போட்டி, கலை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. பந்தனேந்தல் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சித் தலைவர் குருசாமி பரிசு வழங்கினர்.*செயின்ட் மேரீஸ் மெட்ரிக்., பள்ளியில், தாளாளர் பிலவேந்திரன் தலைமையில் நிர்வாகி கீதா முன்னிலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் இமாகுலேட், துணைமுதல்வர் கயல்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.* முடுக்கன்குளம் ஆர்.ஐ., அலுவலகத்தில் ரத்தினவேல்பாண்டியன் ஆர்.ஐ.,தலைமையில், பிர்க்காவில் பணிபுரியும் வீ.ஏ.ஓ.,கள், ஊராட்சித் தலைவர்கள் முன்னிலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை ஸ்ரீ ரமணாஸ் கல்வியியல் கல்லுாரி மற்றும் ஸ்ரீ ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, கலை கல்லுாரி செயலர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லுாரி செயலர் பாரதிமுருகன் முன்னிலை வகித்தார். முதல்வர் கதிர்காமு பேசினார். கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் பேசினார். கல்லுாரி இயக்குனர்கள் விக்னேஷ், சங்கர், ஜெயமுருகன் கலந்து கொண்டனர். வளாகத்தில் மாணவிகள் 44 பொங்கல் வைத்தனர். கல்லுாரி டீன் தில்லைநடராஜன் நன்றி கூறினார்.* அருப்புக்கோட்டை ஸ்ரீ விஸ்வாஸ் கல்வி குழும பள்ளியில் பொங்கல் பண்டிகை மற்றும் விஸ்வாஸ் பஜார் நடந்தது. வேட்டி, சேலைகள் அணிந்து மாணவர்கள் பொங்கலிட்டனர். விஸ்வாஸ் பஜாரில் விதவிதமான உணவு பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை பள்ளி செயலர் பழனிவேல்ராஜன், இயக்குன் மகாலட்சுமி செய்தனர்.* அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டி கம்மவார் ராமானுஜர் நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு புகையில்லா போகி கொண்டாடுவது பற்றி விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை மதனகோபால்னா உதவி ஆசிரியர் ராமமூர்த்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X