இதற்கு ஓர் வழி காணுங்க

Added : ஜன 15, 2020
Advertisement

அருப்புக்கோட்டை, :விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் ரோட்டோர நடைபாதைகளில் நடக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது. இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அரசு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டம் முழுவதும் ரோட்டோரத்தில் நடக்க நடைபாதைகள் உள்ளன. பஜார் பகுதிகளில் நடப்பதற்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ரோடு ஓரங்களில் பேவர் பிளாக் சிமென்ட் பாதை அமைத்துள்ளனர். நடைபாதைகள் முழுவதும் நடக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் நடைபாதை வரை தங்கள் கடைகளை நீட்டித்தும், பொருட்களை பரப்பி நடக்க முடியாத அளவிற்கு வைத்துள்ளனர். நடைபாதைகள் ஏதோ கடைகாரர்களுக்கு சொந்தம் போன்று அதில் நடந்து சென்றால் ரோட்டில் நடந்து செல்லும்படி கூறுகின்றனர். நடைபாதைகள் இருப்பதை மறந்து நடு ரோட்டில் தான் மக்கள் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை பல ஊர்களில் உள்ளது.அருப்புக்கோட்டையின் முக்கிய பகுதிகளான திருச்சுழி ரோடு, சத்தியமூர்த்தி பஜார், மதுரை ரோடு உட்பட பல பகுதிகளில் நடைபாதை இருந்தும் நடந்து செல்ல முடியவில்லை. அனைத்து கடைகாரர்களும் ஆக்கிரமிப்பு செய்து கடை பொருட்களை தொங்க விட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். திருச்சுழி ரோட்டில் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் வரிசை கட்டி நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். டெலிபோன் ரோட்டில் நடைபாதைகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்க சிறிய சுவாமி பீடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை பாரபட்சமின்றி அகற்றி பொதுமக்கள் நடந்து செல்ல வழி செய்ய வேண்டும்.பல ஊர்களில் ரோடு குறுகலாக உள்ளது. நடைபாதைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் பாதாசாரிகள் ரோட்டில் நடந்து செல்கின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே பொதுமக்கள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியும். உள்ளாட்சி அமைப்புகள் தான் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- டேனியல், தனியார் ஊழியர்,அருப்புக்கோட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X