பொது செய்தி

தமிழ்நாடு

பார்சல் சேவையில் ரூ. 328 கோடி வருவாய்; தமிழகம் நான்காவது இடம்

Added : ஜன 15, 2020
Advertisement

திருப்பூர் : பார்சல் சேவையில், 328 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, தேசிய அளவில் தமிழகம் நான்காமிடம் பெற்றுள்ளது.

தபால் சேவைகளில் செல்வமகள் சேமிப்பு திட்டம், போஸ்டல் பேமன்ட் பாங்க், காப்பீடு மற்றும் பார்சல் சேவைகள், கடந்தாண்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தபால்துறை அறிவித்துள்ளது.தபால்துறையின், 2019-2020 சாதனை பட்டியலை மத்திய தகவல் தொடர்பு துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், 2019 ஏப்., முதல் டிச., மாதம் வரையில், 16.35 லட்சம் கணக்குகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன.அதிகபட்சமாக மகாராஷ்டிரா 1.68 லட்சம் கணக்குகளுடன் முதலிடத்திலும், 1.61 லட்சம் கணக்குகளுடன் தமிழ்நாடு, 2ம் இடத்திலும் உள்ளது. பீமா கிராம யோஜனா எனும் காப்பீடு திட்டங்கள் கூடுதலாக, 5,481 கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதில், 2,328 கிராமங்களில் விரிவுபடுத்தி மேற்கு வங்கம் முதலிடத்திலும், 1,629 கிராமங்களுக்கு விரிவுபடுத்தி தமிழகம், 2ம் இடத்திலும் உள்ளது. பார்சல் சேவையை பொறுத்தவரை, 328 கோடி வருமானம் தபால்துறைக்கு கிடைத்துள்ளது.இதனை சாத்தியமாக்கியதில், டில்லி முதலிடத்திலும், மகாராஷ்டிரா, 2ம் இடத்திலும், கர்நாடகா, 3ம் இடமும், 26 கோடி ரூபாய் ஈட்டி தமிழகம், நான்காம் இடத்திலும் உள்ளது.தபால்துறை அதிகாரி கூறுகையில், 'டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், 109 கோடி வரையில் பணபரிமாற்றம் நடந்துள்ளது.
நாடு முழுவதும், 65 மாவட்டங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1.87 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டுள்ளன,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X