பொது செய்தி

தமிழ்நாடு

போத்தனுார் - பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் வழித்தடம் மின்மயமாக்கும் பணி

Added : ஜன 15, 2020 | கருத்துகள் (2)
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பாலக்காடு - போத்தனுார் உள்ளிட்ட ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கலுக்கான ஒப்பந்தப்புள்ளி, 587.53 கோடி ரூபாயில் அளிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்படுகின்றன.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு; பொள்ளாச்சி - போத்தனுார் உள்ளிட்ட ரயில் வழித்தடங்களை மின்மயாக்கும் பணி விரைவில் துவங்கப்படும் என, ரயில்வே மின்மயமாக்கலுக்கான மத்திய அமைப்பு கடந்தாண்டு அறிவித்தது.இதையடுத்து, பொள்ளாச்சி சுற்றுப்பகுதி ரயில் வழித்தடங்களில் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், மின்மயமாக்கலுக்கான ஒப்பந்த புள்ளி, லார்சென் அண்டு டப்ரோ (எல் அண்டு டி) ஒப்பந்த கட்டுமான நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்மயமாக்கும் வழித்தடம் மதுரை - மானாமதுரை; சேலம் - விருதாசலம் - கூடலுார்; சொர்ணுார் - நீலம்பூர்; செங்கோட்டை - தென்காசி - திருநெல்வேலி - திருச்செந்துார்; விருதுநகர் - தென்காசி; திருச்சி - மானாமதுரை - விருதுநகர்; திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு; பொள்ளாச்சி - போத்தனுார் ஆகிய, 1,137.552 கி.மீ., தொலைவு மின்மயமாக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.இதன் திட்ட மதிப்பு, 587.53 கோடி ரூபாயாகும். பணிகள், 900 நாட்களில் முடிக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும், 2022ம் ஆண்டில், பொள்ளாச்சிக்கான ரயில் வழித்தடங்கள் அனைத்தும் மின்மயமாக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
15-ஜன-202012:18:05 IST Report Abuse
R Hariharan நல்ல செய்தி. கூடிய விரைவில் வேலை ஆரம்பிக்க வேண்டும். நன்றி டு தினமலர்.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-ஜன-202011:30:21 IST Report Abuse
Loganathan Kuttuva டீசல் செலவு இன்றி ரயில் பயணம் நாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X