தமிழ்நாடு

திறந்தவெளி கால்வாயில்விழுந்து செல்லும் வாகனங்கள்

Added : ஜன 15, 2020
Advertisement

ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோட்டின் பல இடங்களில் சாக்கடை கால்வாய் மூடப்படாமல் திறந்து கிடப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு வடக்கு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் மற்றும் மழைநீர் வழிந்தோடும் வகையில் புதிதாக கால்வாய் கட்டப்பட்டது. இதில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டால் சரி செய்ய சிமென்ட் மூடிகளால் மூடப்பட்டது.இப்பகுதியில் மார்க்கெட் செல்லும் சரக்கு வாகனங்கள் அதிகம். இரவு நேரத்தில் சிமென்ட் மூடிகள் பார்வைக்கு சரிவர தெரியாது என்பதால், வாகனங்கள் அதன் மேல் ஏறிச் சென்றன. இதனால் பல இடங்களில் மூடிகள் உடைந்து விட்டன.இதற்கு பதிலாக சரக்கு வாகனங்கள் ஏறிச் சென்றாலும், உடையாத வகையில் பலமான மூடிகளை அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் ஒட்டன்சத்திரம் நகராட்சியிடம் பலமுறை வலியுறுத்தினர்.ஆனால் இதுவரை இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல் அப்படியே உள்ளது. இதனால் திறந்த சாக்கடையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் அடிக்கடி மாட்டிக் கொள்கின்றன. நகராட்சி நிர்வாகம் இதற்கு நிரந்தரமான தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X