பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பங்களிப்புடன் தபால் ஆபீசில், 'இ - சேவை'

Added : ஜன 15, 2020
Advertisement

கோவை : தனியார் பங்களிப்புடன் தபால் அலுவலகங்களில் இ - சேவை செயல்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தபால்துறையின் கீழ் நாடுமுழுவதும் 1.55 லட்சம் தபால்நிலையங்கள் உள்ளன. துறையை நவீனமயமாக்கும் 'தர்பன்' திட்டத்தில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் கையடக்க டிஜிட்டல் கருவிகள், 40 ஆயிரம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் வழங்கபட்டுள்ளன.190 பார்சல் மையம், 8 ஒருங்கிணைந்த பார்சல் மையங்கள் மற்றும் 4 லட்சத்து 85 ஆயிரம் தபால் பெட்டிகள் நாடுமுழுவதும் உள்ளன.

நாட்டின் மூலை முடுக்கு வரை தனது சேவைகளை கொண்டு செல்லும் தபால்துறையின் அலுவலகங்கள், மனித வளம், ஐடி தளவாடங்களை, இ - சேவைகள், இ - வணிகத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X