பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் பொங்கல் விழா

Added : ஜன 15, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல் கே.கே.அய்யநாடார்-கங்காமிர்தம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.தாளாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். நாடார் உறவின்முறை தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் சங்கரநாராயணன், எம்.எஸ்.பி., பள்ளி தலைவர் மதிச்செல்வன், தாளாளர் முருகேசன், அய்யநாடார் பள்ளி தலைவர் கண்ணன், துணைத் தலைவர் சின்னச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் வயலட்காந்தி நன்றி கூறினார்.ஒட்டன்சத்திரம்நவாமரத்துப்பட்டி விவேகானந்தர் வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்த விழாவில் மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையுடன் பொங்கல் வைத்து வழிபட்டனர். தாளாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். அங்குள்ள வித்யாகணபதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். மாணவிகள் பாட்டுப்பாடி கும்மி அடித்து கொண்டாடினர். தொப்பாக் காவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி தலைமையில் மாணவ மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்தனர். உதவி ஆசிரியர் கல்யாணி, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.காளாஞ்சிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொங்கல்விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சதாசிவம் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் அமுதா விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வராஜ், உதவி ஆசிரியர் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பழநியில் பொங்கல்பழநி சப் கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதுசப்கலெக்டர் உமா தலைமை வகித்தார். போலீஸ் டி.எஸ்.பி., விவேகானந்தன், தாசில்தார் பழனிச்சாமி உட்பட வருவாய்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X