கோவை - -ராமேஸ்வரம் பொங்கல் சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை - -ராமேஸ்வரம் பொங்கல் சிறப்பு ரயில் தொடர்ந்து இயக்க வலியுறுத்தல்

Added : ஜன 15, 2020


பழநி, கோவையில் இருந்து பொங்கல் சிறப்பு ரயில் பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக பொங்கலன்று பழநி முருகன், மதுரை மீனாட்சி, ராமேஸ்வரம் கோயில்களுக்கு சென்றுவர ஏதுவாக கோவை - -ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நேற்று காலை 11:50 மணிக்கு பழநி வந்த ரயிலை, பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வரவேற்றனர்.ஜன.14 மற்றும் 16 ல் காலை 9:45 மணிக்கு கோவையில் புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு மாலை 6:45 க்கு சென்றடையும், மீண்டும் ஜன. 15, 17 தேதிகளில் காலை 8:15 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு மாலை 4:30 க்கு கோவை சென்று சேரும்.பாசஞ்சர் ரயில் என்பதால் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். பழநி ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பச்சமுத்து கூறுகையில், "இந்த சிறப்பு ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனை பண்டிகை நேரத்தில் மட்டுமின்றி, தொடர்ந்து இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். குறைந்தபட்சம் ராமேஸ்வரத்தில் இருந்து பழநி வரையிலாவது ரயிலை இயக்க வேண்டும். என்றார். பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வரவேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X