அரசு மருத்துவமனையில் 6 குழந்தைகள் மரணம்

Added : ஜன 15, 2020
Advertisement

ஷாதோல் : மத்திய பிரதேசத்தின் ஷாதோலில், அரசு மருத்துவமனையில், பிறந்து ஒருநாள் மற்றும் இரண்டறை மாதமான, ஆறு பழங்குடியினகுழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. இதுகுறித்து, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தின், ஷாதோலில் உள்ள அரசு மருத்துவமனையில், ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, கடந்த இரண்டு நாட்களில், பிறந்து ஒருநாள் மற்றும் இரண்டறை மாதமான, ௬ பழங்குடியினகுழந்தைகள் இறந்துள்ளன.அடுத்தடுத்துநிகழ்ந்த, சிசுக்களின் மரணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் துளசி சிலவத் உத்தரவிட்டார். மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கமலேஷ்வர் படேல், மருத்துவமனையை பார்வையிட்டு, டாக்டர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

பின், ''குழந்தைகளின் மரணம் தொடர்பாக, உயர்மட்டக்குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X