3 சுங்க அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு

Added : ஜன 15, 2020
Advertisement

புதுடில்லி : அதிக மதிப்புடைய வைரங்களை இறக்குமதி செய்ததாக, பொய்யாக பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட, மூன்று மூத்த சுங்க அதிகாரிகள் உள்ளிட்ட, 17 பேரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது.

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் கிரிஷ் கதேல், நான்கு நிறுவனங்களின் பெயர்களில், பல ஆயிரம் கோடி மதிப்புமிக்க வைரங்களை, ஸ்விட்சர்லாந்தில் இருந்து ஹாங்காங்கிற்கு இறக்குமதி செய்துள்ளார். இந்தியாவில் வணிகம் செய்ய விரும்பிய அவர், வைரங்களை, அங்கிருந்து இந்தியாவிற்கும் இறக்குமதி செய்துள்ளார். இரண்டு நிறுவனங்களின் பெயர்களில், 156.28 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்களை இறக்குமதி செய்ததாக சுங்கத்துறையிடம், அவர் தரப்பில் பதிவு செய்யப்பட்டது.

எனினும், டி.ஆர்.ஐ., எனப்படும், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடத்திய ஆய்வில், கிரிஷ் கதேல் இறக்குமதி செய்த வைரங்களின் மதிப்பு, 1.03 கோடி ரூபாய் மட்டுமே என்றும், 156.28 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் என, பொய்யான தகவல் பதிவு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மோசடியில், சுங்க அதிகாரிகளும் ஈடுபட்டிருந்தது, டி.ஆர்.ஐ., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ., தொடங்கியது.

விசாரணையில், அப்போது விமான நிலைய சிறப்பு சரக்குப் பிரிவு கமிஷனராக இருந்த வினய் பிரிஜ் சிங், அவருக்கு கீழ் இருந்த அதிகாரிகளின் உதவியுடன், சாதகமான அறிக்கையை தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, அந்த மோசடியில் ஈடுபட்ட கமிஷனர் வினய் பிரிஜ் சிங், துணை கமிஷனர்கள் சந்திரவான்ஷி மணிகண்ணையா, ஆஷிகசாமன், தொழிலதிபர் கிரிஷ் கதேல் என, 17 பேர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்துகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X