பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்

Added : ஜன 15, 2020
Advertisement

வகுப்பை 'கட்' அடித்துசாலையை சீரமைத்த மாணவர்கள்அவுரங்காபாத்: மஹாராஷ்டிரா மாநிலம், அவரங்காபாத் மாவட்டம், தமான்கான்ரஜுர் பகுதியில், சாலை மிக மோசமாக இருந்ததால், கடந்த மாதம், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அங்குள்ள பள்ளி மாணவர்கள், 10 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், வகுப்புகளை நேற்ற புறக்கணித்த மாணவர்கள், சாலையை சீரமைத்து, பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்க வழி செய்தனர்.

'மம்தா பானர்ஜி ஒரு அரக்கி'லக்னோ: 'ஆயிரகணக்கான ஹிந்துக்களை கொன்றவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகிறார். அதனால் தான், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார். அவரிடம் பெண்மைக்கான எந்த குணமும் இல்லை. புராண காலத்து அரக்கி போல் உள்ளார்' என, உத்தர பிரதேச பா.ஜ.,- எம்.எல்.ஏ., சுரேந்திர சிங் கூறினார்.ராஜ்கபூர் மகள் மரணம்மும்பை: ஹிந்தி திரைப்படத்தின் முன்னணி நடிகராக இருந்தவர் ராஜ் கபூர். இவரது மகள் ரீட்டு நந்தா, 71. கடந்த சில ஆண்டுகளாக, புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரீட்டு, நேற்று இறந்தார்.

மாணவர்களிடம் என்.எச்.ஆர்.சி., விசாரணைபுதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, டில்லி ஜாமியா மிலியா பல்கலையில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது, போலீசார் தடியடி நடத்தி, கலவரத்தை கட்டுப்படுத்தினர். போலீசார் தடியடியில் காயம் அடைந்த மாணவர்களிடம், என்.எச்.ஆர்.சி., எனப்படும் தேசிய மனித உரிமை கமிஷன், நேற்று விசாரணை நடத்தி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்தது.'மாஜி' நக்சலின் சகோதரர் கொலைதண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியை சேர்ந்வர் பாமன் மாண்டவி. மாவோயிஸ்ட் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், பின்னர், அதிலிருந்து விலகி, போலீசில் சரண் அடைந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த நக்சலைட்கள், அவரது தம்பி, லட்சுமண் மாண்டவியை, நேற்று கத்தியால் குத்தி கொலை செய்தனர்.பிறந்த குழந்தையை கடித்து கொன்ற நாய்பரூக்கபாத்: உத்தர பிரதேச மாநிலம், பருக்காபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில், காஞ்சனா என்ற பெண், பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை அறையில் தாயும், குழந்தையும் இருந்தனர். அப்போது, அங்கு வந்த நாய் ஒன்று, குழந்தையை வெளியே இழுத்து சென்று, கடித்து குதறியுள்ளது. இதில் குழந்தை இறந்தது. இது பற்றிய புகாரின் பேரில், மருத்துவமனைக்கு போலீசார், 'சீல்' வைத்தனர்.

பா.ஜ., தலைவர் மீது 2 வழக்குகள் பதிவுகோல்கட்டா: 'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்துபவர்களை, சுட்டுக் கொல்ல வேண்டும்' என, மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர் திலிப் கோஷ் கூறினார். இது பற்றி திரிணமுல் காங்., கட்சியினர் கொடுத்த புகார்களின் பேரில், நாடியா, 24 பராகனாஸ் ஆகிய மாவட்டங்களில், திலிப் கோஷ் மீது, போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X